Kathai Kathaiyaam

Tuesday, January 17, 2006

ஆனை வரும் பின்னே, தும்பி வரும் முன்னே!

கனவு கலைந்து, விழித்தும் விழிக்காத விடியற்க்காலையில், ஆனையின் தும்பிக்கைக்கு பெயர்க்காரணம் என்ன, என்று ஒரு குழப்பம். தும்பிப்பூச்சியின் வால் போல வளைவதால் அதற்க்கு தும்பிக்கை என்று பெயர் வந்திருக்கலாம். அல்லது, "தும்பு" என்றால் "முன் பகுதி" என்று ஒரு பொருள் உண்டு - அதனாலும் (முன் பகுதியில் உள்ள கை ஆதலால்) ஏற்பட்டிருக்கலாம். "தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த மாதிரி" என்று பழமொழி கூட உண்டு. இவை இரண்டில் ("தும்பி" அல்லது "தும்பு") எது சரியான பெயர்க்காரணம் என்று குடைச்சல்.

முதலில் தோன்றிய சொல் எது என்று பார்த்தால், தும்பி என்ற சொல் புறனானூற்றுப்பாடலில் உள்ளது நினைவிற்க்கு வந்தது ("கொங்குதேர் வாழ்க்கை" எனத் தொடங்கும்).

முதலில், தும்பிக்கு அந்த பெயர் எப்படி வந்தது, எங்ஙனம் தோன்றியிருக்க முடியும் என்று எண்ணினேன். "தும்பு" + "ஈ" - முன்புறம் ஈயைப்போல் உள்ளதால் இந்தப்பெயர் வந்திருக்க வேண்டும்.

ஆனையாரிடம் திரும்புவோம். தும்பிக்கைக்கு தும்பு+கை என்று பெயர்க்காரணம் கூறினால் பெயர் "தும்புக்கை" என்றல்லவா வர வேண்டும்? தும்பிக்கை என்று அமைவதனால், இது தும்பி போல வளைவதனாலேயே இந்த பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் தமிழ் மக்கள் ஆனையை அறியும் முன்னர் தும்பியை அறிந்திருக்க வேண்டும்.

5 மறுமொழிகள்:

  • Blogger Aruna Srinivasan, 6:57 AMக்கு சொன்னது.

    தமிழ் வலைப்பதிவுலகுக்கு வரவேற்கிறேன் கிங்ஸ்லீ. சௌக்கியமா? எகனாமிக் டைம்ஸ் நினைவிருக்கா ? :-) தமிழ்மணம் தேன்கூடு போன்ற திரட்டிகளில் உங்கள் பதிவையும் இணைத்துக்கொள்ளுங்களேன். உங்கள் ஆங்கிலப்பதிவு போல் தமிழுலகிலும் சுவாரசியமாக ஒரு ரவுண்ட் வரலாம். :-)

     

  • Blogger Ravages, 7:47 AMக்கு சொன்னது.

    கிங்ஸ்லீ, இது என்ன, PhD thesisஸுக்கான ஒரு அலசல்? நன்னா இருக்கு நீ சொல்ர கதை!
    பார்க்க போனா, நீ சொல்ரதிலும் ஒரு உன்மை இருக்கதான் செய்ரது, evolutionary senseல பார்த்தா, முதல தும்பி வந்த அப்புரம தான் யானை வந்திருக்கணும்

     

  • Blogger zap, 10:07 PMக்கு சொன்னது.

    i cant read or write tamil, but i did send you mail in english..

     

  • Blogger cvrk, 9:47 AMக்கு சொன்னது.

    hello,
    How all of you are posting in tamil. how to input tamil letters?

     

  • Anonymous Muthu Online, 1:15 AMக்கு சொன்னது.

    thambi jegan , Mozilla villa fontu satru vithiyasamaai thondrukeeradhu? unicode dhanae?

     

Post a Comment

இந்தப்பதிப்பின் பின்னூட்டுகள்:

Create a Link

<< முதற்ப்பக்கம்